குழந்தைகளின் மனப்பக்குவத்தை பலப்படுத்த புதிய திட்டம்: ஆணைய உறுப்பினர் தகவல்

ழந்தைகளின் மனப்பக்குவத்தைப் பலப்படுத்த புதுவையில் விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று

குழந்தைகளின் மனப்பக்குவத்தைப் பலப்படுத்த புதுவையில் விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் புதுவை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமை விகித்தார். இந்த கூட்டத்தில்,  சைல்டு லைன் செயல்பாடு, குழந்தைப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
புதுவையில் உள்ள குழந்தைகள் காப்பகங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி,  இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, 66 காப்பகங்களிலிருந்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் குறைகள் இருந்த 6 காப்பகங்கள் மூடப்பட்டன. தற்போது புதுவையில் 60 காப்பகங்கள் உள்ளன.
குழந்தைகள் காப்பகங்களை மாநில அரசும், குழந்தை பாதுகாப்பு ஆணையரும் மாதம் ஒரு முறை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்தாண்டு தேசிய குழந்தைகள் ஆணையம் அளித்த பரிந்துரை மீது நூறு சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 12 விதமான பரிந்துரைகளை வழங்கியுள்ளேன்.  மாணவர்கள் பள்ளி இடை நிற்றலுக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும்.  பள்ளி நேரத்துக்கு மேல் விருப்பமின்றி குழந்தைகள் பள்ளியில் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கடந்தாண்டு 17 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் குழந்தைகள் நலக் குழுவுக்கு புதிய வரைவுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கலந்தாய்வு வழங்கவும், இந்த சம்பவத்துக்கு காரணமான பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
நாட்டிலேயே முதல் முறையாக குழந்தைகளின் மனப்பக்குவத்தை மனோ ரீதியாக பலப்படுத்துவது தொடர்பான புதிய வரைவுத் திட்டத்தைத் தயார் செய்து,  மகளிர் மற்றும் குழந்தை மேம்பா
ட்டுத் துறை செயலரிடம் வழங்கியுள்ளோம்.  இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படும். தொலைநோக்கு பார்வையில் இந்தத் திட்டத்தை புதுவை அரசு தொடங்க 
வேண்டும்.
புதுவையில் கடந்த 6 ஆண்டுகளாக குழந்தை தொழிலாளர்கள் இல்லை.  ஒரே ஒரு குழந்தை தொழிலாளர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். குழந்தைகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் புதுவையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனால், குற்றங்கள் குறையும். 
தமிழகம்,  புதுவையில் பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் (கட்செவி அஞ்சல், முகநூல்) வாயிலாக வந்த குழந்தைகள் தொடர்பான புகார்களை தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரித்து, 250 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில்,  சமூக நலத் துறை செயலர் ஆலீஸ் வாஸ்,  புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தி.அருண், தொழிலாளர் துறை ஆணையர்  வல்வலன்,  புதுவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவி தேவி பிரியா,  கல்வித் துறை இயக்குநர் ருத்ர கெளடு  மற்றும் குழந்தைகள் காப்பக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com