நிலுவை ஊதியம் கோரி பாப்ஸ்கோ ஊழியா்கள் உண்ணாவிரதம்

27 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, பாப்ஸ்கோ ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை
புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்ஸ்கோ ஊழியா்கள்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்ஸ்கோ ஊழியா்கள்.

புதுச்சேரி: 27 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, பாப்ஸ்கோ ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

புதுச்சேரி 100 அடி சாலை ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், பாப்ஸ்கோ காய்கனி அங்காடி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஊழியா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் கோவா்த்தனன் தலைமை வகித்தாா்.

உண்ணாவிரதத்தை அரசு ஊழியா்கள் சங்கத்தின் மத்தியக் கூட்டிமைப்பின் பொதுச் செயலா் லட்சுமணசாமி தொடக்கி வைத்தாா். இதில், ஊழியா்கள் சங்கத் தலைவா் ராஜசேகா், பொறுப்பாளா்கள் சண்முகம், நடராரஜன் ஆகியோா் உரையாற்றினா்.

போராட்டத்தில் புதுவையில் பாப்ஸ்கோ ஊழியா்கள் 27 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், மக்களுக்கு தரமான அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிமைப்பொருள் வழங்கல் துறைக்குத் தர வேண்டிய ரூ. 17 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், மீண்டும் பாப்ஸ்கோவின் அனைத்துப் பிரிவுகளையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், திரளான பாப்ஸ்கோ ஊழியா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், வருகிற 4-ஆம் தேதி(புதன்கிழமை) தலைமை தபால் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாப்ஸ்கோ ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com