முத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி பேருக்கு கடன்

முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 26 கோடிப் பேருக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.

முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 26 கோடிப் பேருக்கு சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர், மாநில அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார்,  சமூகநலத் துறை, பிற்பட்டோர் நலத் துறை,  ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  
ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் 16 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. நாடு முழுவதும் 33 கோடி பேர் ஜன்தன் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். அதேபோல, முத்ரா 
வங்கிக் கடன் திட்டத்தில் புதுவையில் மட்டும் 36,000 பேர் பயன் பெற்றுள்ளனர். ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் எவ்விதப் பிணையும் இன்றி கடனாக வழங்கப்படுகிறது. 
புதுவையில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  நாடு முழுவதும் 26 கோடிப் பேர் முத்ரா கடன் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தலித்களுக்கு ரூ.3.30 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.  
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஓதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.  இது மோடி 
அரசின் வரலாற்று சாதனை.  
ஓபிசி பிரிவினருக்கு இப்போது 27 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள்தொகையில் ஓபிசி பிரிவினர் 37 சதவீதமாக இருப்பதால், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 37 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
  மேலும்,  சட்டப்பேரவை,  மக்களவைத் தொகுதிகளில் தலித்துகளுக்கு தனியாக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது போல, ஓபிசி பிரிவினருக்கும் அரசியல் ரீதியான இட
ஒதுக்கீடு அவசியம் என்றார் ராம்தாஸ் 
அதவாலே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com