தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான 
டி.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கணினி மூலம் தற்செயல் கலப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் பணி குறித்த இரண்டு கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
2-ஆம் கட்டப் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அந்த இரு ஊழியர்கள் மீது சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கும் தேர்தல் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை முதல் வருகிற 16 -ஆம் தேதி வரை நடைபெறும் மூன்றாம் கட்டப் பயிற்சியில் தவறாது பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com