புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது.
தேர்தலை அமைதியாகவும், நேர்மையான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் விநியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும்,  மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவு விவரம்: 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வாக்குப்பதிவு தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
 ஆனாலும், வீடுகள் தோறும் சென்று பிரசாரம் செய்வதற்கு தடையில்லை. அதில் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.  விளம்பரப் பதாதைகள்,  துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது. தேர்தல் நேர்மையாக நடைபெற நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் தருபவர்கள் மீதும்,  5-க்கும் மேற்பட்டு கூடுபவர்கள் மீதும் குற்றவியல் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். சப்தமாக வாசகங்களை கூறுவதும்,  ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.   இந்தத் தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com