வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

புதுவை மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் 18 வேட்பாளர்களும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில்  8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 
வாக்காளர்கள்...: புதுச்சேரி மக்களவைத் தேர்தலில்  ஆண் வாக்காளர்கள் 4,59,267, பெண் வாக்காளர்கள் 5,13,798, 96 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,73,410 பேர் வாக்களிக்க உள்ளனர். 
தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள், 15,469 பெண் வாக்காளர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 29,320 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்த 1,850 காவலர்கள், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
பதற்றமான வாக்குச்சாவடிகள்: மொத்தம் உள்ள 970 வாக்குச்சாவடிகளில், 222 (புதுச்சேரி - 171, காரைக்கால் - 29, மாஹே - 10, ஏனாம் - 12) வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 25 (காரைக்கால் - 16, ஏனாம் - 9) வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்
படையினரின் உதவியுடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இணையதள வசதியுடன் கூடிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடியில் வசதிகள்...: வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாஹக்ஷ்க நிழல்பந்தல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 மாற்றுத் திறனாளிகள், முதியோர்களின் வசதிக்காக சாய்வுதளம், சக்கர நாற்காலிகள்,   போக்குவரத்து வசதிகளுடன், உதவிக்காக வாக்குச்சாவடிக்கு 2 பேர் வீதம் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு 36 மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகே 100 மீட்டர், 200 மீட்டர் கட்டுப்பாட்டு கோடுகளும் வரையப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநிலத்தில் உள்ள 970 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இதனுடன் மூன்றாம் கட்ட பயிற்சிகளை முடித்த 4,433 அலுவலர்களும், மாஹே (30), ஏனாம் (40) பகுதிகளுக்கான 76 தலைமை வாக்குச்சாவடி அதிகாரிகளும் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனர்.
அச்சமின்றி வாக்களிக்கலாம்...: வாக்குப்பதிவு தினத்திலும் இதே அமைதியை கடைப்பிடிக்க தேர்தல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. 
வாக்காளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com