கடற்கரைச் சாலையில் வாகனங்களுக்கு தடை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை (ஆக.15) வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை (ஆக.15) வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து வடக்கு - கிழக்கு எஸ்பி கே. முருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சுதந்திர தின விழாவுக்கு அழைப்பிதழ் கிடைக்கப் பெற்ற அனைவரும் வம்பாக்கீரப்பாளையம் சாலை வழியாக விழா நடைபெறும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டுத் திடலுக்கு வர வேண்டும். 
கார் அனுமதி பெற்ற வாகனங்கள் வம்பாக்கீரப்பாளையம் சாலை வழியாக வந்து, விழா நடக்கும் மைதானத்துக்குள் வடக்கு பக்கம் கதவு எண்-1 வழியாக வந்து, வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும். கார் நிறுத்த அனுமதி பெறாத அழைப்பாளர்களின் வாகனங்கள் அனைத்தும் வம்பாக்கீரப்பாளையம் சாலையில் விழா நடைபெறும் மைதானத்துக்கு தெற்கு பக்கம் உள்ள கதவு எண்-2 அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். அணிவகுப்பில் பங்கேற்கும் காவலர்கள், மாணவ, மாணவிகள் சைக்கிள், மோட்டார் பைக்குகளை வம்பாக்கீரப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறுத்த வேண்டும்.
விழாவுக்கு, வரும் அழைப்பாளர்கள் குப்பை, உணவுப் பொருள்கள், கண்ணாடி - பிளாஸ்டிக் தண்ணீர் புட்டிகள், கேமரா, செல்லிடப்பேசி போன்ற பொருள்களுக்கு அனுமதியில்லை.  பாதுகாப்பு கருதி காலை 8.30 மணிக்குள் தங்கள் இருக்கைகளில் இருக்க வேண்டும். 8.30 மணிக்கு மேல் வருபவர்கள் அழைப்பிதழ் வைத்திருந்தாலும் அனுமதி கிடையாது. 
சைக்கிள், மோட்டார் பைக், வாகனங்களை வம்பாக்கீரப்பாளையம் சாலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தி பூட்டிச் செல்ல வேண்டும்.
அழைப்பிதழ் பெறாத பொதுமக்கள், அம்பேத்கர் சாலை வழியாக விழா நடக்கும் மைதானத்துக்கு செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களை பெத்திசெமினார் ஆரம்பப்பள்ளி திடலில் நிறுத்த வேண்டும். கார் மற்றும் இதர வாகனங்கள் உப்பளம் புதிய துறைமுகத் திடலில் நிறுத்த வேண்டும். 
கடற்கரைச் சாலையில் தடை: கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அன்று காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் மறு நாள் காலை 7.30 மணி வரையிலான நேரங்களில் வாகனங்கள் (சைக்கிள் உள்பட) எதுவும் மேற்கண்ட சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது. கடற்கரைச் சாலை தூய்மா வீதி மற்றும் பாரதி பூங்கா, ஆளுநர் மாளிகை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர எந்த வித வாகனங்களும் நிறுத்தக் கூடாது. 
மாறாக, புதுச்சேரி சட்டப்பேரவை மற்றும் பொது மருத்துவமனைக்கு மேற்கே உள்ள மூடப்பட்டுள்ள பெரிய வாய்க்காலின் மீது நிறுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com