சுதந்திர தின விழா: உப்பளம் மைதானத்தில் இன்று கொடியேற்றுகிறார் முதல்வர்

புதுவையில் வியாழக்கிழமை (ஆக.15) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு

புதுவையில் வியாழக்கிழமை (ஆக.15) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் வே.நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
பின்னர், பல்வேறு துறைகளில் வீர, தீர செயல்புரிந்த சாதனையாளர்களுக்கான விருதுகளை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார். அதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி. மாணவர்கள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அணிவகுப்பில் காவலர்களின் ரோந்து வாகனம் முதன் முதலாக பங்கேற்கிறது.
பின்னர், மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில், பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, அமைச்சர்கள், 
எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் 
தீவிரம்: சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுவை காவல் துறை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் இரவு - பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் காவல் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு, வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சுதந்திர தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி கடற்கரை சாலையில் வியாழக்கிழமை (ஆக.15) போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களில் அலங்காரம்: மேலும், சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகை, சட்டப் பேரவை, தலைமைச் செயலகம், தலைவர்களின் சிலைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
உப்பளம் மைதானத்தில் சுதந்திர தின விழா நிறைவுபெற்றதும் அங்கிருந்து சட்டப் பேரவைக்குச் செல்லும் முதல்வர் நாராயணசாமி, அங்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். வியாழக்கிழமை மாலையில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com