செப். 21, 22 -ஆம் தேதிகளில் கம்போடியாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு

பன்னாட்டு தமிழர் நடுவர், அங்கோர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கவிஞர்கள்

பன்னாட்டு தமிழர் நடுவர், அங்கோர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு கம்போடிய நாட்டில் செப்டம்பர் 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநாட்டுத் தலைவர் க.திருத்தணிகாசலம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பன்னாட்டுத் தமிழர் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், சீனு ஞானம் பயண ஏற்பாட்டாளர்கள் இணைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு கம்போடிய நாட்டில் உள்ள சியாம் ரீப் நகரில் செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறு
கிறது. 
தமிழ் மொழியின் செம்மையை உலக அளவில் பரவச் செய்யும் நோக்குடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்வில் தமிழ்க் கவிஞர்களுக்கு கம்போடிய அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, தொல்காப்பியர் விருது, இளங்கோவடிகள் விருது, நந்திவர்மன் விருது, ராஜேந்திர சோழன் விருது, கம்பர் விருது, பாரதியார் விருது, கபிலர் விருது, ஒளவையார் விருது, சுப்ரசனா விருது, சோதரவர்மன் விருது, சூரியவனா விருது, சர்தரணிந்தரவர்மன் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன. 
இந்த விருதுகளுக்கு தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழ்மொழி, வரலாற்று ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது சுய விவரக் குறிப்புகளுடன், தாங்கள் ஆற்றிய தொண்டு, எழுதிய நூல்கள், கவிதைகள், கட்டுரைகளை ‌p​a‌t‌h​a‌n​a‌m2018@‌g‌m​a‌i‌l.​c‌o‌m, a‌n‌g‌k‌o‌r​a‌w​a‌r‌d‌s@‌g‌m​a‌i‌l.​c‌o‌m ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டப்பேரவைத் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com