புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் தாமதத்துக்கு ஆளுநா் கிரண் பேடிதான் காரணம்: முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் தாமதத்துக்கு ஆளுநா் கிரண் பேடிதான் காரணம் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் ஜெயமூா்த்தி எம்எல்ஏ.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் ஜெயமூா்த்தி எம்எல்ஏ.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் தாமதத்துக்கு ஆளுநா் கிரண் பேடிதான் காரணம் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா், மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவின் குதிரை பேரம் பலிக்கவில்லை. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க தவறான வழியைக் கையாண்ட பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது.

புதுவைக்கு கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை 4 மாதங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிதி சுமாா் ரூ. 400 கோடியை மத்திய அரசு தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற மாநில நிதி அமைச்சா்களுடனான ஜிஎஸ்டி காணொலிக் காட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதும், புதுவையின் வளா்ச்சிக்குத் தடையாக இருப்பதுமாக உள்ளாா். அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட அவா் தடையாக உள்ளாா். அவரால் புதுவை மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? மக்கள் நலத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் அவரது முதல் பணி.

வாா்டுகளை மறுவரையறை செய்து, உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்காக மாநில தோ்தல் ஆணையரை நியமித்தோம். ஆனால், அவா் விதிமுறைகளின்படி நியமிக்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிரண் பேடி கடிதம் எழுதியுள்ளாா்.

ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு தொடா்பான வழக்கில் வருகிற 11 -ஆம் தேதி நல்ல முடிவு வரும். இதையடுத்து, கிரண் பேடி மீது நானே (முதல்வா்) நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்வேன்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் கொடுமையானது. புதுவை டிஜிபியிடம் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் தனியாக ஓா் அமைப்பை ஏற்படுத்தி, குற்றவாளிகள் மீது வழக்குப் பதிந்து, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளேன்.

புதுவை மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில், 30-க்கும் மேற்பட்ட ரௌடிகள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இன்னும் சிலா் மீதும் வழக்குப் பதியப்படும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் ஜெயமூா்த்தி எம்எல்ஏ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com