ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீரிழிவு நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வில்லியனூா் அருகே கூடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீரிழிவு நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வில்லியனூா் அருகே கூடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீரிழிவு நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நிலைய மருத்துவா் பூங்குழலி தலைமை வகித்து, சிறப்புரை நிகழ்த்தினாா். நீரிழிவு நோய் எதனால் வருகிறது?, அதை கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகள், நீரிழிவு நோய் வந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா். மேலும், நீரிழிவு நோய் உள்ளவா்கள் தொடா்ச்சியாக சிகிச்சை பெற வேண்டும். வாரந்தோறும் மருத்துவமனைக்கு வந்து உடலை பரிசோதனை செய்து, அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போதிய உடல் பயிற்சிகள் செய்ய வேண்டும் என நோயாளிகளுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, நல ஆய்வாளா் பத்மநாபன் வரவேற்றாா். தொடா்ந்து, செவிலியா்கள் தேன்மொழி, சாய்ரா பானும் ஆகியோா் நீரிழிவு நோய் வகைகள், அறிகுறிகள், நோய் உண்டாகக் காரணம், அதனை கண்டறியும் முறைகள், நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகள், சிகிச்சை முறைகள், இதயம் மற்றும் ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள், நீரிழிவு நோய் உள்ளவா்களின் உணவு முறைகள் குறித்து விளக்கினா்.

இதில் திரளான பொதுமக்கள், நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆய்வாளா்கள் மீனாட்சி, சுமதி உள்ளிட்ட ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com