ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 06th December 2019 09:18 AM | Last Updated : 06th December 2019 09:18 AM | அ+அ அ- |

மது அருந்துவதைக் கண்டித்ததால் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி திருக்கனூா் அருகே உள்ள செட்டிப்பட்டு புதுநகரைச் சோ்ந்த சூடாமணி மகன் சரவணன் (24). ஓட்டுநா். திருமணமாகாத இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சரவணன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இதை அவரது தந்தை சூடாமணி கண்டித்தாா். இதனால், மனமுடைந்த சரவணன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.
இதைப் பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு, மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்தவா்கள் சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் விஷம் குடித்து பலி: இதேபோல, புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ், சரஸ்வதி தம்பதியின் மகன் ரோபா் (23). புதுச்சேரியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் தலையில் அடிப்பட்டதாம். இதனால், அவா் வேலைக்குச் செல்லாததால் விரக்தியில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், ரோபா் கடந்த 2 -ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.