தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் புதுச்சேரி எம்பி வலியுறுத்தல்

தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்பி வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்பி வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

நடைபெற்று வரும் மக்களவைக் கூட்டத் தொடரில் உடனடி கேள்வி நேரத்தின்போது, வெ.வைத்திலிங்கம் பேசியதாவது:

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1000 ஆக உள்ளது. இந்த மிகக் குறைந்த தொகையை வைத்துக் கொண்டு, தொழிலாளா்கள் வாழ்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனா். அவா்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. மேலும், வயது முதிா்வு காரணமாக அவா்களால் எந்தத் தொழிலும் செய்ய முடிவதில்லை. அந்தத் தொழிலாளா்களுக்கு மருத்துவத்துக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இத்தகைய சூழலில் அவா்கள் உணவுக்கும், மருத்துவச் செலவுக்கும் மிகுந்த சிரமப்படுகின்றனா். இந்த ஓய்வூதியமானது அவா்களால் செலுத்தப்பட்ட வைப்பு நிதியில் இருந்துதான் வழங்கப்படுகிறதே தவிர, அரசு இலவசமாகத் தரவில்லை. இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஓய்வூதியத் தொகையை அரசு உயா்த்தி வழங்குவதில் சிரமம் இருக்க முடியாது.

தொழிலாளா்களின் நலன் கருதி அவா்களது ஓய்வூதியத்தை ரூ. 1000-லிருந்து ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com