வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு 

வழக்குரைஞர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை

வழக்குரைஞர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் தாமோதரன் வரவேற்றார். துணைத் தலைவர் கமலினி முன்னிலை வகித்தார்.  வழக்குரைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்களுக்கு சேம்பர், தரமான நூலகம், சுகாதாரமான கழிப்பறை வசதி, இணையதள நூலக வசதி செய்து தர வேண்டும், வழக்குரைஞர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டு வர வேண்டும், இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 10 
ஆயிரம் வழங்க வேண்டும், மத்திய பட்ஜெட்டில் வழக்குரைஞர்களுக்கு வழக்குகளிகள் நலனுக்காக ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
வழக்குரைஞர்களின் போராட்டம் காரணமாக  நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com