புட்சால் கால்பந்து போட்டி: புதுச்சேரி அணி முதலிடம்

கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான புட்சால் கால்பந்துப் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்திய புட்சால் சங்கம் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில்

கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான புட்சால் கால்பந்துப் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
இந்திய புட்சால் சங்கம் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில் பிப்.21-ஆம் தேதி தொடங்கி  23-ஆம் தேதி வரை தேசிய அளவிலான புட்சால் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றன. 
இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. புதுச்சேரி புட்சால் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி அணியும் பங்கேற்றது. முதலில் தெலங்கானா அணியிடம் 1-1 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணி சமன் செய்த நிலையில், சிக்கிம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து, சண்டீகர் அணியுடன் மோதி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் தில்லி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் மஹாராஷ்டிரா அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் தமிழகத்துடன் புதுச்சேரி அணி மோதியது. இதில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.  இதையடுத்து பெனால்டி சூட் முறையில் புதுச்சேரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை வென்று முதலிடத்தை பிடித்தது. புதுச்சேரி அணியின் கோல் கீப்பர் வினோத் சிறந்த கோல்கீப்பர் விருதை வென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com