22 பேருக்கு முன்னோடியாளர்கள் விருது

புதுவை மாநிலத்தில் கடந்தாண்டு சிறப்பாகச் செயல்பட்ட 22 பேருக்கு வெள்ளிக்கிழமை முன்னோடியாளர் விருது வழங்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கடந்தாண்டு சிறப்பாகச் செயல்பட்ட 22 பேருக்கு வெள்ளிக்கிழமை முன்னோடியாளர் விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2018-இல் மாற்றத்துக்காக உழைத்த புதுவை மாநில அரசு அதிகாரிகள், சமூகச் சிந்தனையாளர்கள், தொண்டு நிறுவனங்களைக் கெளரவிக்கும் வகையில் முன்னோடியாளர்கள் விருது ஆளுநர் மாளிகையில் (ப்ராண்ட் ரன்னர்ஸ்) வழங்கப்பட்டது.
அதன்படி, ஸ்வச்சதா செயல்பாட்டுக்காக உருளையன்பேட்டை நகராட்சி ஆணையர் எம்.கந்தசாமி, புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் எஸ்.சேகரன், பி. குருசாமி ஆகியோருக்கும், ஸ்வச்சதா அமலாக்கத்துக்காக புதுச்சேரி நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.எத்திராஜ், எல்ஏ.பொன்னம்பலம், குறைதீர்ப்புக்காக மகளிர்-குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் ஏ.ஸ்டெல்லா மேரி, அரியாங்குப்பம் காவல் நிலைய தலைமை அலுவலர் எம்.இளங்கோ, உருளையன்பேட்டை எஸ்.ஐ. முத்துக்குமரன், தன்வந்திரி நகர் கலையரசன் ஆகியோருக்கும், தண்ணீர் பிரச்னையைக் கையாண்ட எஸ்.மனோகரன், கே.ராஜாகிருஷ்ணன், ஆர்.ரமேஷ், வி.சந்திரசேகர், டெங்கு சிறப்பு ஆய்வுக்காக வி. சுந்தரராஜ் துணை இயக்குநர் (மலேரியா) ஏ.கணேசன் துணை இயக்குநர் (மலேரியா) சமூக ஆர்வலர்கள் பி.ரகுபதி, எஸ்.கண்ணன், சி.சுரேஷ்குமார், ராஜ்கலா பார்த்தா, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதலுக்காக காவல் ஆய்வாளர் ராஜாசங்கர் வெளாட், தன்வந்திரி, சீனிவாசன் ஆகிய 22 பேருக்கு ஆளுநர் கிரண் பேடி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
முன்னதாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவநீதி தாஸ் வரவேற்றார். தலைமைச் செயலர் அஸ்வினி குமார் சிறப்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com