ஜிப்மர் ஊழியர்களுக்கு மின்னணு வகுப்பறை பயிற்சி

புதுச்சேரி ஜிப்மர் ஊழியர்களுக்கு மின்னணு வகுப்பறை பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் ஊழியர்களுக்கு மின்னணு வகுப்பறை பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலஅமைச்சகத்தின் தேசிய மருத்துவக் கல்லூரி வலைதளத் திட்டத்தின் கீழ், நோடல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப  ஊழியர்களுக்கான மின்னணு வகுப்பறை (இ-கிளாஸ் ரூம்) பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் ஆந்திரம்,  தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுவையில் இருந்து சுமார் 30 பேர் பங்கேற்று பயிற்சி பங்கேற்றனர்.
ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்தார்.  மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான எர்நெட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் நீனா, இந்தியா இயக்குநர் திலிப் பர்மன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
இந்தப் பயிற்சி குறித்து ஜிப்மர் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறும்போது, நாடு முழுவதும் இருந்து பங்குபெறும் 50 மருத்துவ நிறுவனங்களும்,  எண்ம மருத்துவ விரிவுரை
அரங்கம் (இ-கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டு, மத்திய அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது என்றனர்.
மின்னணு வகுப்பு மூலம் தேசிய அளவிலான ஆடியோவிஸுவல் கற்பித்தலின் அனைத்து வித தொழில்நுட்ப அம்சங்களுடன் தேசிய தகவல் வலைபின்னல் நெட்வொர்க்கின் மூலம் தேசிய தகவல் மையத்தின் கீழ் அதிவேக செயற்கை இழை இணைப்பு மூலம் அனைத்து வகுப்பறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னணு வகுப்பறை திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பங்கேற்கும் நிறுவனங்களில்  மருத்துவக் கல்விக்கான ஒருநிலையான செயல்பாட்டையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியும்.  இந்த வசதியானது தொலைக்கல்வி மற்றும் கருத்துப்பதிவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  
அதுமட்டுமன்றி தொடர் மருத்துவக் கல்வி  அமர்வுகளுக்கும் இது பயன்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com