பாண்லே நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிதாக ஆள்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி குருமாம்பட்டு பாண்லே

புதிதாக ஆள்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி குருமாம்பட்டு பாண்லே  அலுவலகம் எதிரே என்ஆர்டியூசி தொழில்சங்கத்தினர்   வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் உள்ள அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் அதிகப்படியான ஆள்கள் நியமிக்கப்பட்டதால், நிதிச்சுமை ஏற்பட்டு தற்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே 
தற்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகிறது. 
இந்த நிலையில், பாண்லேவில் தற்போதைய அரசு அதிகப்படியான ஆள்களை நியமனம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இது நீடித்தால் பாண்லேவும் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 
இந்த நிலையில், பாண்லேவில் புதிதாக ஆள்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து என்ஆர்டியூசி தொழில்சங்கம் சார்பில், பாண்லே ஊழியர்கள் புதுச்சேரி குருமாம்பட்டு பாண்லே அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான பாண்லே ஊழியர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜெ. ஜெயபால் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, நிறுவனத்தின் வியாபார தேவைக்கு அதிகமாக உள்ள ஆள்களைப் பயன்படுத்தும் விதமாக புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும், புதிதாக ஆள்களை நியமிப்பதைக் கைவிட வேண்டும், ரூ. 130 ஊதியம் பெறுபவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்
பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com