பதவி உயர்வு விவகாரம்: சுற்றுலாத் துறை மேலாண் இயக்குநர் அலுவலகம் முற்றுகை

புதுவை சுண்ணாம்பாறு படகு குழாமில் மேலாளர் பதவி உயர்வைக் கண்டித்து, புதுச்சேரி சுற்றுலாத் துறை (பிடிடிசி) மேலாண் இயக்குநர் அலுவலகத்தை ஊழியர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை சுண்ணாம்பாறு படகு குழாமில் மேலாளர் பதவி உயர்வைக் கண்டித்து, புதுச்சேரி சுற்றுலாத் துறை (பிடிடிசி) மேலாண் இயக்குநர் அலுவலகத்தை ஊழியர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் மேலாளராகப் பணியாற்றியவர் சாஜி. இவர், கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக ராஜ்குமாரை பிடிடிசி நிர்வாகம் மேலாளராக நியமித்தது.
இதில், தவறு நடந்திருப்பதாகக் கூறி, அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் உடனடியாக பிரச்னை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதுநிலை எஸ்.பி. அபூர்வ குப்தா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பிறகு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டு, போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் புதன்கிழமை காலை பிடிடிசி ஊழியர் சம்மேளன கெளரவத் தலைவர் பாலமோகனன் தலைமையில், நிர்வாகிகள், ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கடற்கரை சாலையில் உள்ள பிடிடிசி மேலாண் இயக்குநர் அலுவலகத்தில் குவிந்தனர். அங்கிருந்த மேலாண் இயக்குநர் முருகேசனை சந்தித்து, அவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதற்கு, அவர் மறுத்த நிலையில், மேலாண் இயக்குநர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு, நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர். தவறான முறையில் மேலாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய நிர்வாகிகள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சுண்ணாம்பாறு படகு குழாம், கேட்டரிங், சீகல்ஸ், ஊசுட்டேரியில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக, அங்கு பணிகள் பாதிக்கப்பட்டன.  இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com