உதவி ஆய்வாளர்கள் உள்பட 39 போலீஸார் பணியிட மாற்றம்

புதுவையில் 9 உதவி ஆய்வாளர்கள் உள்பட 39 போலீஸார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

புதுவையில் 9 உதவி ஆய்வாளர்கள் உள்பட 39 போலீஸார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
 புதுவை மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி 6 உதவி ஆய்வாளர்கள் உள்பட 77 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது 9 உதவி ஆய்வாளர்கள் உள்பட 39 தலைமைக் காவலர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 அதன்படி, காரைக்கால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜராஜ சந்திரமோகன், பெரியக்கடை காவல் நிலையத்துக்கும், ஆயுதப் படைப் பிரிவு மற்றும் தெற்கு பகுதி போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் அருணாச்சலம் காரைக்கால் கடலோரக் காவல் படைப் பிரிவுக்கும், சிக்மா செக்யூரிட்டி தலைமை அலுவலக உதவி ஆய்வாளர் பூபதி, காரைக்கால் பிசிஆர் பிரிவுக்கும், சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் லட்சுமி நாராயணன், ஏனாம் பிசிஆர் பிரிவுக்கும், பிஏபி - ராஜ்நிவாஸ் உதவி ஆய்வாளர் பரந்தாமன், தரியலிடிப்பா புறக்காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இதேபோல, ரெட்டியார்பாளையம் உதவி ஆய்வாளர் பைராஜான், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கும், ஒதியஞ்சாலை உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, மங்கலம் காவல் நிலையத்துக்கும், உருளையன்பேட்டை உதவி ஆய்வாளர் ஆனந்த்ராஜ் கிழக்கு போக்குவரத்துப் பிரிவுக்கும், மாஹே பிஏபி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சோலை நகர் புறக்காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 30 தலைமைக் காவலர்கள் என மொத்தம் 39 பேர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல் துறை தலைமையக எஸ்.பி. கொண்டா வெங்கடேஸ்வர ராவ் பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com