மலேரியா விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி

புதுச்சேரி குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், மலேரியா விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி புதுச்சேரி மணிமேகலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், மலேரியா விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி புதுச்சேரி மணிமேகலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தன்னம்பிக்கை கலைக் குழுவின் நிறுவனர் எலிசபெத் ராணி தலமையிலான கலைக் குழுவினர், மலேரியா விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்வின் முடிவில் மாணவிகள் மலேரியா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
 முன்னதாக, நிகழ்வுக்கு மருத்துவ அதிகாரி நிர்மல்குமார் தலைமை வகித்தார். ஹோமியோபதி மருத்துவர் உஸஸ், பள்ளியின் துணை முதல்வர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு விருந்தினராக தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்டத்தின் மாநிலத் திட்ட அதிகாரி சுந்தர்ராஜன், மலேரியா உதவி இயக்குநர் கணேசன் ஆகியோர் பங்கேற்று, மலேரியா நோய்க்கான அறிகுறிகள், பரிசோதனைகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com