காவல் துறை கட்டுப்பாட்டு அறை திறப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி, புதுவை மாநில காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: மக்களவைத் தேர்தலையொட்டி, புதுவை மாநில காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல், புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவை வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலை எந்தவித வன்முறைச் சம்பவங்களும், முறைகேடுகளும் இன்றி அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து புதுவை காவல் துறையில் தேர்தல் பிரிவு காவல் கண்காணிப்பாளராக என். ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் கட்டமாக , புதுச்சேரி காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 4 தலைமைக் காவலர் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பது, பொதுமக்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர். 
இதே போல, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் (1950), செல்லிடப்பேசி செயலி மூலம் வரும் புகார்கள் குறித்தும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள நிலைய காவல் அதிகாரி மூலம் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியில் தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 
இந்த கட்டுப்பாட்டு அறை வழியாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கத் தொடங்கியுள்ளனர். 
தேர்தல் கட்டுபாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பொதுமக்களும் புகார் அளிக்கலாம் என தேர்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரியும், காவல் கண்காணிப்பாளருமான என். ரவிக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com