புதுவை மக்களவைத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் வேட்பாளர்

புதுவை மக்களவைத் தொகுதிக்கான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் வேட்பாளர் சோ.மோதிலாலை அந்தக்


புதுவை மக்களவைத் தொகுதிக்கான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் வேட்பாளர் சோ.மோதிலாலை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சங்கர் பங்கு சனிக்கிழமை அறிமுகம் செய்தார்.
பின்னர், சங்கர் பங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கமாக மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி 60 முதல் 80 தொகுதிகளில் போட்டியிடும். ஆனால், இந்த முறை பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு புதுவை உள்ளிட்ட 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளது. எங்களது கட்சிக்கு பிகாரில் 3 எம்.எல்.ஏ.க்களும், ஜார்க்கண்டில் ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர்.
தனியாரை ஊக்கப்படுத்துவதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. புதிய வனச் சட்டம் மூலம் வனத்தில் வாழ்ந்து வரும் 20 லட்சம் பழங்குடியினரை வெளியேற்ற முயற்சிக்கிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என்ற நிலையை உருவாக்கி நிலங்களை கையகப்படுத்தி 8 வழிச்சாலை உள்ளிட்டவற்றை அமைக்க முயற்சிக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com