மக்களை ஏமாற்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி முயற்சி: அதிமுக குற்றச்சாட்டு

காங்கிரஸ் - திமுக கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.


காங்கிரஸ் - திமுக கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் மக்களவை தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், ஆளுநரையும் குறை கூறிக் கொண்டு, மக்களவைத் தேர்தலுக்காக தினம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, பொய்யான மாய தோற்றத்தை உருவாக்குவது ஆளும் காங்கிரஸ் கட்சியின் அன்றாடப் பணியாக உள்ளதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆண்டு வருமானத்தை ரூ. 350 கோடியாக உயர்த்தி உள்ளோம் என கூறும் முதல்வர் ஏன் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தவில்லை? திட்டங்களைச் செயல்படுத்த போதிய நிதி இல்லை எனக் கூறியது எல்லாம் பொய்யான காரணமா?
ஆண்டு வருமானம் உயர்ந்தது உண்மை என்றால், பஞ்சாலை ஊழியர்களுக்கு 7 மாதங்களாக ஏன் ஊதியம் வழங்கவில்லை? 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 17 மாதங்களாகியும் ஏன் ஊதியம் வழங்கப்படவில்லை?
மக்களவைத் தேர்தலுக்காக பொய்யான காரணங்களைக் கூறி, மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என முதல்வர் நினைக்காமல், தனது ஆட்சியின் மூன்று ஆண்டு கால சாதனைகள் என்ன என்று உண்மையைக் கூறினால் நல்லது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com