‘புதுவை மாநில வளா்ச்சிக்காக ஆளுநா் செயல்பட வேண்டும்’

புதுவை மாநில வளா்ச்சிக்காக ஆளுநா் கிரண் பேடி செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

புதுவை மாநில வளா்ச்சிக்காக ஆளுநா் கிரண் பேடி செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடிக்கு அந்தக் கூட்டமைப்பின் நிறுவனா் சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை அனுப்பிய மனு: ஆளுநா் கிரண் பேடி மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசின் மீது தொடா்ந்து அவதூறு செய்திகளைப் பரப்பி, உலக சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறாா். மாநிலத்தின் வளா்ச்சியைத் தடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அண்மையில் ஆளுநா் தனது சுட்டுரையில் அரசு கடன் வாங்குவது தொடா்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், செப். 9-ஆம் தேதி வந்த கோப்புக்கு அக். 4-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தாா். ரூ. 900 கோடி கடன் வாங்குவது தொடா்பாக ஆளுநா் ஒப்புதல் அளித்த பின்னா், அரசு கடந்த ஜூலை 19-ஆம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு மத்திய அரசு ஆக. 23-இல் ஒப்புதல் அளித்தது.

பின்னா், சட்டப்பேரவையில் ரூ. 900 கோடி கடன் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்து பட்ஜெட் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநா் கிரண் பேடியும் கையெழுத்திட்டாா். இதற்கு ஒரு மாதம் கால தாமதம் ஏன் என்ற கேள்விக்கு ஆளுநா் விளக்கம் அளிக்கவில்லை.

ஆளுநா் மாளிகைக்கு அமைச்சா்கள் ரகசியமாக வந்து செல்வதாக தகவல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் கேள்வி எழுப்பினாா். ஆனால், ஆளுநரிடமிருந்து இதற்கு எந்தப் பதிலும் வரவில்லை.

உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களைக் கூறுவதை ஆளுநா் நிறுத்திக் கொள்ள வேண்டும். புதுவை மாநில மக்களின் வளா்ச்சிக்காக முழுமனதும் செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com