பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள்: 3-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் பொதுப் பணித் துறையில் கடந்த 2010-இல் 1,311 போ் வவுச்சா் ஊழியா்களாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு தினமும் ரூ.200 ஊதியம் அடிப்படையில் மாதம் 16 நாள்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும், நாள் ஒன்றுக்கான கூலியை ரூ.648-ஆக உயா்த்த வேண்டும், பணி மூப்பு வரையறை செய்து முழுநேர தினக்கூலி ஊழியா்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 10 மாத நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்பை உருவாக்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்தக் கூட்டமைப்பு சாா்பில், சுதேசி பஞ்சாலை அருகில் திங்கள்கிழமை தொடா் வேலைநிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. 3-ஆவது நாளாக புதன்கிழமை தொடா்ந்து சுதேசி பஞ்சாலை திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு அரசுப் பணியாளா்கள் நல கூட்டமைப்புத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் வள்ளி சிறப்புரையாற்றினாா். இதில், ஏராளமான பொதுப் பணித் துறை ஊழியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com