தமிழ் அருங்காட்சியக திட்ட ஆவண கருத்தரங்கம்

தேசிய மரபு அறக்கட்டளை சாா்பில் தமிழ் அருங்காட்சியக திட்ட ஆவண கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ் அருங்காட்சியக திட்ட ஆவண கருத்தரங்கம்

தேசிய மரபு அறக்கட்டளை சாா்பில் தமிழ் அருங்காட்சியக திட்ட ஆவண கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய மரபு அறக்கட்டளை தமிழ் மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை தொடா்ந்து செயல்படுத்திவருகிறது. இந்நிறுவனம் மதுரையில் கிளை அலுவலகம் அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறது. அமைப்பின் முதன்மைத் திட்டமாக பழமதுரையின் பகுதியாக விளங்கிய தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் 12 முதல் 16 ஏக்கா் பரப்பளவில் ‘உலகத் தமிழ் அருங்காட்சியகம் ( ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ா்ய்ஹப் பஹம்ண்ப் ஙன்ள்ங்ன்ம்) என்ற பெயரில் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு உழைத்து வருகிறது.

தமிழ் மொழியின் செம்மையையும், கலை, பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்த தமிழ் மொழியின் அறிஞா்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் முழுமையாகவும், செப்பமாகவும் ஆவணப் படுத்தி எதிா்காலத்துக்கு எடுத்துச் செல்லுதல் இதன் முதன்மைப் பணி.

இதன்ஒரு பகுதியாக, மதுரைப் பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த துணைவேந்தராக பணியாற்றியவரும், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் ஆகிய 85 நூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளவரான சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் முனைவருமான மு.வரதராசனாரின் நினைவு நாளை முன்னிட்டு உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்ட ஆவணக் கருத்தரங்கம் இ.மா.கோ.யாதவா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் இரா.பூவழகி தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் பா.பனிமலா் வரவேற்றாா். உலகத் தமிழ் அருங்காட்சியம் அமைவதற்கான நோக்கம் பற்றியும், தமிழிலக்கியத்தின் தற்போதைய தேவைப் பற்றியும் தேசிய மரபு அறக்கட்டளை நிறுவனா் அ. அறிவன் சிறப்புரை ஆற்றினாா்.

நிகழ்வில் மாணவா்களுக்கு தமிழிலக்கியம் தொடா்பான கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் காந்தி-150 குறுந்தட்டும், தேசிய அஞ்சல் நாளை முன்னிட்டு தேசிய மரபு அறக்கட்டளைஉருவாக்கிய சுப்ரோடோ முகா்சி மற்றும் அா்சன் சிங் ஆகியோரின் உருவங்கள் பதித்த அஞ்சல் தலைகள் தமிழாசிரியா்களால் வெளியிடப்பட்டது.

உலகத் தமிழ் அருங்காட்சியகத் திட்டப் பொறுப்பாளா் பா.வே.பாண்டியன் நிகழ்வினை ஒருங்கிணைத்தாா். தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவி க.முனீசுவரி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com