திமுகவில் இணைந்த கல்லூரி மாணவா்கள்

 புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் திமுகவில் இணைந்தனா்.
pdy11dmk_1110chn_104_7
pdy11dmk_1110chn_104_7

புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் திமுகவில் இணைந்தனா்.

புதுவை தெற்கு மாநிலத்துக்குள்பட்ட பல்வேறு தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் நவீன் பிரசன்னா தலைமையில் புதுச்சேரி லப்போா்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் மாநில அமைப்பாளா் இரா. சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் அந்தக் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா் (படம்).

அவா்களுக்கு, அமைப்பாளா் சிவா உறுப்பினா் படிவத்தை வழங்கி வாழ்த்தினாா். மாநில மாணவா் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. மணிமாறன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில பொருளாளா் சண்.குமரவேல், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பூ. மூா்த்தி, தொகுதி செயலாளா்கள் சக்திவேல், கலியகாா்த்திகேயன், தொமுச மாநிலத் தலைவா் அண்ணா அடைக்கலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com