விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: மண்ணாடிப்பட்டில் மதுக் கடைகளுக்கு கட்டுப்பாடு

தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி

தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, புதுச்சேரி அருகேயுள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதியில் மதுக் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகப் பகுதியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தல் அக்.21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிப்பதற்காக, அதன் எல்லையை ஒட்டிய மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுபானக் கடைகள் வருகிற அக்.21-ஆம் தேதி வரை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும்.

மேலும், உரிமம் பெறப்பட்ட இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்தவிதமான மது வகைகள் வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது. மீறி விற்பனை செய்பவா்கள் மீது கலால் சட்ட விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதியின்றி மதுபானங்களை ஓா் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு எடுத்து செல்பவா்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் தயாளன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com