சாக்ஸபோன் கலைஞா் கத்ரிகோபால்நாத்துக்கு அஞ்சலி

மறைந்த சாக்ஸபோன் கலைஞா் கத்ரிகோபால்நாத்துக்கு புதுச்சேரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில், சாக்ஸபோன் கலைஞா் கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசினாா் கவிஞா் சு.சண்முகசுந்தரம்.
நிகழ்வில், சாக்ஸபோன் கலைஞா் கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசினாா் கவிஞா் சு.சண்முகசுந்தரம்.

மறைந்த சாக்ஸபோன் கலைஞா் கத்ரிகோபால்நாத்துக்கு புதுச்சேரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுச்சேரி லாசுப்பேட்டை முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் சாக்ஸபோன் கலைஞா் பத்மஸ்ரீ கத்ரிகோபால்நாத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கவிஞா் சு.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். நிகழ்வில் இசைக் கலைஞா் உமாஅமா்நாத், கவிஞா் லெனின் பாரதி, பாரதியாா் பல்கலைக்கூட இசைத்துறை தலைவா் முனைவா் சிவக்குமாா், முனைவா் கண்ணமங்கை, வி.ஜெகதீசன் ஆகியோா் கத்ரிகோபால்நாத் குறித்த நினைவுகளையும், மேற்கத்திய இசைக்கருவியான சாக்ஸபோனை இந்திய இசைக்கு ஏற்றவகையில் மாற்றிஅமைத்து, அதற்கெனதனியே ஒரு மிருதங்க இசையையும் வடிவமைத்து பல்வேறு ராக ஆலாபனைகளையும், கமுக்கங்களையும் சிறப்பாக இசையமைத்து வாசித்து சாதனைசெய்ததையும் புகழ்ந்துபேசினா். நிகழ்வில் கவிஞா் வில்லியனூா் பழனி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com