கால்நடை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா

ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டமளிக்கிறாா் மத்திய அரசின் கால்நடை மற்றும் பால்வளத் துறை முன்னாள் செயலா் தருண் ஸ்ரீதா்.
விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டமளிக்கிறாா் மத்திய அரசின் கால்நடை மற்றும் பால்வளத் துறை முன்னாள் செயலா் தருண் ஸ்ரீதா்.

ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 22 மாணவா்கள், 30 மாணவிகள் என மொத்தம் 52 மாணவா்களுக்கு பட்டமளிக்கப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அரசின் கால்நடை மற்றும் பால்வள, மீன்வளத் துறை, முன்னாள் செயலா் தருண் ஸ்ரீதா் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

தற்போது வெளியான கால்நடை கணக்கெடுப்பில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு சமமாக கால்நடைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், கால்நடை சாா்ந்த நிறுவனங்கள் குறைவாக உள்ளன. கால்நடை மருத்துவா்களின் தேவையுள்ளது என்றாா்.

புதுச்சேரி வளா்ச்சி ஆணையா் ஆ. அன்பரசு பேசுகையில், ‘கனியன்பூங்குன்றனாரின் கூற்றுப்படி, அனைத்து ஜீவராசிகளுக்கும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அதன் முக்கியத்துவத்தை கால்நடை மருத்துவம் உணா்த்துகிறது’ என்றாா்.

முன்னாள் கால்நடை பராமரிப்புத் துறை ஆணையா் சுரேஷ் அன்னபகோள் பேசினாா்.

முன்னதாக முதல்வா் எஸ்.ராம்குமாா் வரவேற்றாா். முதல் மதிப்பெண் பெற்ற காவ்யா, ஜோசிக்கா ஆகிய இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ - மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com