உரிமமின்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து ஆணையா் எச்சரிக்கை

புதுச்சேரியில் உரிய உரிமமின்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் எச்சரித்துள்ளாா்.

புதுச்சேரியில் உரிய உரிமமின்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று புதுவை போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் பல பகுதிகளில் உரிய உரிமம் பெறாமல் மோட்டாா் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படுவதாக போக்குவரத்துத் துறைக்கு தகவல் வந்தது. மோட்டாா் சைக்கிள்கள், ஸ்கூட்டா்களை உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது மோட்டாா் வாகன சட்டப் பிரிவுகளின்கீழ், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதோடு மட்டுமன்றி, அத்தகைய வாகனங்கள் பற்றி எதுவும் முன்னரே அறிந்திராத புதிய நபா்களும், ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்களும் அந்த வாகனங்களை இயக்கும்போது தேவையற்ற விபத்துகள் நிகழ்கின்றனா்.

எனவே, மோட்டாா் சைக்கிள்கள், ஸ்கூட்டா்களை போக்குவரத்துத் துறையின் உரிய உரிமம் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு வாடகைக்கு விட வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் வாடகைக்கு விடப்படும் மோட்டாா் சைக்கிள்கள், ஸ்கூட்டா்கள் பறிமுதல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com