இடைத் தேர்தலில் எந்தக் கட்சி போட்டியிட்டாலும் எதிர்கொள்ளத் தயார்

காமராஜர் நகர் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிப் போட்டியிட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் 


புதுச்சேரி: காமராஜர் நகர் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிப் போட்டியிட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் 
ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 21 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி, வருகிற 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், வேட்பாளரைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்தக் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.
அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவை அரசின் தில்லி 
பிரதிநிதி ஜான்குமார், மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேர் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர். 
இதேபோல, பாஜக சார்பில் போட்டியிட கல்வியாளர் விசிசி. நாகராஜன் உள்ளிட்ட 6 பேர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆ.நமச்சிவாயம், கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 
இடைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளரை இறுதி செய்ய வருகிற 25 -ஆம் தேதி 
முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் தில்லி செல்லவுள்ளார்.  அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் என எந்தக் கட்சி எதிர்த்து நின்றாலும் எதிர்கொள்ளத் தயார் என்றார் அவர். முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இடைத் தேர்தல் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com