இடைத் தேர்தல்: திமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு

தமிழகம், புதுவையில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென 

தமிழகம், புதுவையில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம், புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை வகித்தார். தமிழ் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத்,  அ.சவுந்தரராசன்,  புதுவை பிரதேச குழுச் செயலர் ஆர்.ராஜாங்கம் உள்ளிட்ட தமிழகம், புதுவையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 தமிழகம், கேரள மாநிலங்களுக்கிடையிலான பல்வேறு நதி நீர் பிரச்னைகள் குறித்து இரு மாநில முதல்வர்களும் வருகிற 25-ஆம் தேதி சந்தித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு வரவேற்கிறது. இந்த சந்திப்பின் மூலம் இரு மாநில உறவுகள் பலப்படுவதுடன், நிலுவையிலுள்ள அனைத்து நதிநீர், பாசன பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுவையில் காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும்.
தமிழகத்தில் நீட் தேர்வு முதல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழகம், புதுவையில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை தோற்கடிக்கும் பொருட்டு, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுமக்கள் பங்கேற்கும் மாநில உரிமைகளும், மக்கள் விரோத மசோதாக்களும் என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெறவுள்ளது.  இதில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com