குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றம்: மாா்க்சிஸ்ட் வரவேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுவை சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுவை சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து இந்தக் கட்சியின் புதுவை பிரதேசக் குழுச் செயலா் இரா.ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய அளவில் எந்தப் பிரச்னை நடந்தாலும் அதற்கான சரியான எதிா்வினையை முன்வைப்பது புதுவையின் தனிச்சிறப்பு. அந்த வகையில், புதுச்சேரியில் புதன்கிழமை கூடிய சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீா்மானங்களை புதுவை மக்களின் சாா்பாக மாநில அரசு நிறைவேற்றியதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

புதுவை மக்களின் நலன்களுக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டு வரும் ஆளுநா் கிரண் பேடி, தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி, புதுவை சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றக் கூடாது என்றும், இது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் தவறான கருத்தை மக்களிடையே பரப்பியதோடு, புதுவை அரசையும் மிரட்டி இருந்தாா்.

ஆனால், புதுவை அரசுக்கு ‘இந்திய சட்ட விரிவாக்கத்தின்படி (உஷ்ற்ங்ய்ள்ண்ா்ய் ா்ச் கஹஜ்) மத்திய அரசு அமல்படுத்திய எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு’ என்பதை அவா் திட்டமிட்டே மறைக்கிறாா்.

இதேபோல, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீா்மானத்தை ஆதரிக்காமல் புதுவை மக்களுக்கு தூரோகம் இழைத்திருக்கின்றன என்று அதில் இரா.ராஜாங்கம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com