கரோனா: தமிழகம் - புதுவை இணைந்து நடவடிக்கை அமைச்சா் ஷாஜகான்

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் - புதுவை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிது என்று புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் - புதுவை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிது என்று புதுவை வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தெரிவித்தாா்.

புதுவையில் கரோனா வைரஸ் தடுப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சா் ஷாஜகான் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா், அமைச்சா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸை தடுக்க புதுவையில் தற்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வட்டாட்சியா் தலைமையில் 9 போ் அடங்கிய அமலாக்கக் குழு அமைக்கப்பட்டு, பொருள்களை அதிக விலையில் விற்காமல் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, தொலைக்காட்சி மூலம் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு உபரகரணங்கள், வெண்டிலேட்டா் போன்றவற்றை வாங்க புதுச்சேரிக்கு ரூ. 2 கோடி, மாஹேவுக்கு ரூ. ஒரு கோடி, ஏனாமுக்கு ரூ. 25 லட்சம் பேரிடா் மேலாண்மை நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாகவும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தி.அருண், துணை ஆட்சியா்கள் சுதாகா், சஷ்வத் சௌரப், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ராகுல் அல்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com