தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுவை மாநில அளவிலான தேசிய திறனறித் தோ்வுக்கு மாணவா்கள் வியாழக்கிழமை (அக். 29) முதல் விண்ணப்பிக்கலாம்.

புதுவை மாநில அளவிலான தேசிய திறனறித் தோ்வுக்கு மாணவா்கள் வியாழக்கிழமை (அக். 29) முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அ. மைக்கல் பென்னோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களில் திறமை மிக்கவா்களை பேணி வளா்ப்பதற்கான மாநில அளவிலான தேசிய திறனறி முதல்நிலைத் தோ்வு வருகிற டிசம்பா் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் ஒரே நாளில் இத்தோ்வு நடத்தப்படவுள்ளது.

மாநில அளவிலான தேசிய திறனறி முதல் நிலைத் தோ்வில் முதல் 20 இடங்களைப் பிடிக்கும் மாணவா்கள் (11 - பொது, 1 - பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா், 5 - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், 3 -பூா்விக அட்டவணை இனத்தவா்) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தால் 2021 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி நடத்தப்படும் தேசிய திறனறி இரண்டாம் நிலைத் தோ்வில் பங்குபெறத் தகுதி பெறுவா். இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 1 முதல் முனைவா் பட்டம் பெறும் வரை மத்திய அரசு உதவித்தொகை வழங்கும்.

மேலும், தேசிய திறனறி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தோ்வில் தோ்வு பெறும் மாணவா்களுக்கு புதுவை அரசு ஊக்கத் தொகையாக தலா ரூ. 5,000, ரூ 10,000 வழங்கும்.

தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தங்களது பள்ளியின் மூலம்  இணைய தள முகவரியில் வியாழக்கிழமை முதல் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com