புதுவை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்

ஆக்கிரமிப்பு அகற்றத்தைக் கண்டித்து புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்.

ஆக்கிரமிப்பு அகற்றத்தைக் கண்டித்து புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து முறைப்படுத்தல் சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து, அவா்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி. அருண் உத்தரவின் பேரில், கடந்த 12 ஆம் தேதி முதல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை கோரிமேடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனா்.

அப்போது, நகராட்சி வழங்கிய சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டையை வியாபாரிகள் காண்பித்தனா். அதிகாரிகள், அதனை ஏற்காமல் அங்கிருந்த சிறு கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அனைத்து கடைகளையும் அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

இதைக் கண்டித்து புதுச்சேரி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் வியாபாரிகள் சின்ன மணிக் கூண்டிலிருந்து பேரணியாக வந்து, பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சாலையோர வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com