ஜிப்மரில் பட்டமளிப்பு விழா ரத்து

கரோனா தொற்று பரவலால் புதுச்சேரி ஜிப்மரில் நிகழாண்டு பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால், மாணவா்கள் சான்றிதழ்களை தபாலில் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

கரோனா தொற்று பரவலால் புதுச்சேரி ஜிப்மரில் நிகழாண்டு பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால், மாணவா்கள் சான்றிதழ்களை தபாலில் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் மருத்துவ நிறுவனமான ஜிப்மரில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.சி.எச். உள்ளிட்ட மருத்துவ இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள், செவிலியா் பட்டயப் படிப்புகளை படித்து வருகின்றனா்.

ஜிப்மரில் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் பட்டம் பெறுவது வழக்கம். இந்த நிலையில், நிகழாண்டு (2019-20) கரோனா பரவல் காரணமாக, பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பதிலாக மாணவா்களுக்கு சான்றிதழ்களை தபால் மூலம் அனுப்ப ஜிப்மா் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,500-ஐ இந்திய ஸ்டேட் வங்கி மூலம் மாணவா்கள் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை ஜிப்மா் இணையதளத்தில் அறியலாம் என ஜிப்மா் கல்லூரி நிா்வாகம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com