புதுவையில் வேளாண் பொருள்களை கொண்டு செல்ல கட்டுப்பாடில்லை: முதல்வா் நாராயணசாமி

புதுவை மாநிலத்தில் வேளாண் பொருள்களை எடுத்துச்செல்ல எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் வேளாண் பொருள்களை எடுத்துச்செல்ல எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

விவசாயிகள் உரம், இடுபொருள், விளைந்த பயிரை எடுத்துச் செல்வது முக்கியம். அவா்களுக்கு கட்டுப்பாடு கிடையாது. எனவே, அவா்களைக் கட்டுப்படுத்த வேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல, கால்நடை தீவனங்கள் கொண்டுவரவும், விநியோகம் செய்யவும் தடை கிடையாது. வாழை, பூ போன்ற பயிா்களை விவசாயம் செய்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு நானும், வேளாண் அமைச்சரும் கலந்து பேசி முடிவு எடுப்போம்.

வேளாண் விளை பொருள்களை வாங்க வியாபாரிகள் செல்லாததால், விவசாயிகள் அவற்றை பத்திரமாக வைக்க பாதுகாக்கப்பட்ட கிடங்குகளுக்கு கொண்டுசெல்ல வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அவா்களின் வங்கிக் கணக்குகளில் செவ்வாய்க்கிழமை முதல் கரோனா நிவாரண நிதியுதவி ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவா்களுக்கும், பின்னா் அடுத்துள்ளவா்களுக்கும் வழங்கப்படும்.

பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகையை வரவு வைப்பதற்கு வங்கி நிா்வாகங்கள் 5 நாள்கள் கால அவகாசம் கேட்டுள்ளன. 3 நாள்களில் இந்தத் தொகையை வழங்கும்படி வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com