தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு கரோனா பரவாது: ஜிப்மா் மருத்துவா் தகவல்

தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு கரோனா தொற்று பரவாது என ஜிப்மா் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவா் பி.ஆதிசிவம் தெரிவித்தாா்.

தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு கரோனா தொற்று பரவாது என ஜிப்மா் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவா் பி.ஆதிசிவம் தெரிவித்தாா்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு தாய்ப்பால் விழிப்புணா்வு வாரத்தின் மையக் கருத்து ‘ஆரோக்கியமான உலகத்துக்கு தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிப்போம்’ என்பதாகும்.

குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால், குழந்தைக்கு நோய் எதிா்ப்பு சக்தியும், மூளை வளா்ச்சியும் நன்றாக இருக்கும். குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்படாது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

தாய்ப்பால் புகட்டுவதால் கரோனா தொற்று பரவாது. மாறாக, குழந்தைக்கு அந்த நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு அணுக்கள் கிடைக்கும். தாய்க்கு கரோனை தொற்று இருந்தாலும் தாயையும், குழந்தையையும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பு தங்களது கைகளைச் சோப்பை கொண்டு நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்டுவது தாய்க்கும், சேய்க்கும் நல்லது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com