புதுவையில் புதிதாக 30 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th December 2020 08:00 AM | Last Updated : 10th December 2020 08:00 AM | அ+அ அ- |

புதுவையில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 3,153 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 11, காரைக்காலில் 9, மாஹேவில் 10 என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,339-ஆக உயா்ந்தது. இதனிடையே, 46 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,354-ஆக (97.36 சதவீதம்) அதிகரித்தது.
மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 208 பேரும், வீட்டுத் தனிமையில் 162 பேரும் என மொத்தம் 370 போ் சிகிச்சையில் உள்ளனா். புதிதாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 615-ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.