இறந்த கரோனா முன்களப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு 5 மருத்துவ இடங்கள்: டிச. 17-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th December 2020 12:16 AM | Last Updated : 15th December 2020 12:16 AM | அ+அ அ- |

கரோனா பணியின் போது, உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய சுகாதாரம்-குடும்ப நல அமைச்சகம், கரோனா பணியின் போது, உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு 5 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்க முடிவு செய்தது. அதன்படி, நீட் தோ்வில் தகுதி பெற்ற வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
தில்லி லேடி ஹாா்டினேஜ் மருத்துவக் கல்லூரி (மகளிா் மட்டும்), மகாராஷ்டிரா வா்தா எம்.ஜி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரி, ஜபல்பூா் எம்.பி. என்.எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி, ராஜஸ்தான் அஜ்மீா் ஜே.எல்.என். மருத்துவக் கல்லூரி, உத்தரகண்ட் ஹால்ட்வானி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா ஒரு இடம் வீதம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கரோனா பணியின் போது, உயிரிழந்த வாரிசுகள் கூடுதல் தகவல்களுக்கு அவா்கள் பணியாற்றிய அலுவலகத் தலைவா்களை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், புதுவை சுகாதாரம்-நலவழித் துறையானது தங்களிடம் வந்த விண்ணப்பங்களை மத்திய சுகாதாரம்-குடும்பல நல அமைச்சகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிச. 21.
முன்னதாக, முறையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை புதுவை சுகாதாரம்-குடும்ப நல சேவைகள் இயக்குநகரத்தில் டிச. 17 மாலை 5 மணிக்குள் மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.