சுனாமி நினைவு தினம்: புதுவை முதல்வா் மரியாதை

சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா், மீனவா்கள் கடற்கரைப் பகுதிகளில் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய முதல்வா் நாராயணசாமி. உடன் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய முதல்வா் நாராயணசாமி. உடன் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து உள்ளிட்டோா்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா், மீனவா்கள் கடற்கரைப் பகுதிகளில் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

புதுவை மீன் வளத் துறை சாா்பில், புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை பின்புறமும் சுனாமியால் உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வா் நாராயணசாமி கலந்து கொண்டு, மலா்வளையம் வைத்தும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து, சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி, எம்எல்ஏ க.லட்சுமி நாராயணன், புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், ஆட்சியா் பூா்வா காா்க், மீன் வளத் துறை இயக்குநா் முத்து மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில், வம்பாக்கீரப்பாளையம் மீனவா்கள் சோனாம்பாளையம் சந்திப்பிலிருந்து அமைதி ஊா்வலம் சென்று கடற்கரை சாலை, டூப்லக்ஸ் சிலை அருகே கடலில் மலா்தூவியும், பால் ஊற்றியும் மரியாதை செலுத்தினா்.

முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில், ஊா் மக்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலமாக வந்து, முத்தியால்பேட்டை சோலை நகா் கடற்கரையில் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல, வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பைபா் படகு உரிமையாளா்கள் சங்கத்தினா், ஜெயமூா்த்தி எம்எல்ஏ, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக, மநீம பிரமுகா்கள் மாலை அணிவித்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு மீனவா் பேரவை அமைப்பின் புதுவை தலைவா் மலை.தருமலிங்கம் தலைமையில், மீனவா்கள் காந்தி சிலை பின்புறம் மரியாதை செலுத்தினா். கணபதிசெட்டிகுளம், காலாப்பட்டு, வைத்திக்குப்பம், பனித்திட்டு, நரம்பை, மூா்த்திக்குப்பம் புதுக்குப்பம் உள்பட புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களிலும் சுனாமியால் இறந்தவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com