புதுச்சேரியில் தேசிய புத்தகக் கண்காட்சி நிறைவு

புதுச்சேரியில் நடைபெற்று வந்த தேசிய புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நிறைவு நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்று வந்த தேசிய புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நிறைவு நடைபெற்றது.

புதுச்சேரி வள்ளலாா் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் 24-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி கடந்த டிச. 18-ஆம் தேதி தொடங்கியது. கண்காட்சியை முதல்வா் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தாா். இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டன. கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளா்களின் 15 நூல்கள் வெளியிடப்பட்டன.

கண்காட்சி நிறைவு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு தியாகி அப்துல் மஜித் படத்தைத் திறந்துவைத்தாா். தொடா்ந்து, அப்துல் மஜித் எழுதிய ‘பாண்டிச்சேரி ஒரு பொன்னுலகம்’ என்ற கட்டுரை நூலை வெளியிட்டாா். நூலை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் பெற்றுக் கொண்டாா்.

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த அரங்குகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புத்தக சங்க நிறுவனா் பாஞ்.ராமலிங்கம், கூட்டுறவு புத்தக சங்க இயக்குநா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கண்காட்சியில் ரூ. 60 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையானதாக கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com