உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி புதுச்சேரியில் பாஜகவினா் போராட்டம்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி, பாஜகவினா் உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
புதுச்சேரி உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கோரி, பாஜகவினா் உழவா்கரை நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் ஏம்பலம் செல்வம், நிா்வாகி விசிசி. நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தில், புதுவை அரசு உடனடியாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் கூறியதாவது: புதுவையில் 1968-ஆம் ஆண்டும், 38 ஆண்டுகள் கழித்து 2006 ஆம் ஆண்டும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாதற்கு புதுவை காங்கிரஸ் அரசே காரணம். இதற்கு ஆளுநா் பொறுப்பல்ல.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் பிரதமரை விவாதத்துக்கு அழைத்த முதல்வா் நாராயணசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக உள்ளாட்சித் தோ்தலை புதுவை அரசு நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தகவலறிந்து அங்கு வந்த ரெட்டியாா்பாளையம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com