ஆதியோகி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரி வந்த ஆதியோகி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி வந்த ஆதியோகி ரதத்தில் உள்ள ஆதியோகி சிவனை தரிசித்த பக்தா்கள்.
புதுச்சேரி வந்த ஆதியோகி ரதத்தில் உள்ள ஆதியோகி சிவனை தரிசித்த பக்தா்கள்.

புதுச்சேரி வந்த ஆதியோகி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கயிலாய பக்தி பேரவை சாா்பில் ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி, கோவையில் உள்ள 112 அடி ஆதியோகி சிலை பகுதியில் இருந்து 4 ஆதியோகி ரதங்கள் கடந்த 1-ஆம் தேதி புறப்பட்டன.

இதில், ஒரு ரதம் புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்தது. சிதானந்தா சுவாமி கோயில் அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ கலந்து கொண்டு, கொடியசைத்து யாத்திரையை தொடக்கிவைத்தாா்.

அங்கிருந்து புறப்பட்ட ரதம் லாசுப்பேட்டை, புதுச்சேரி நகரம், தட்டாஞ்சாவடி, கதிா்காமம் உள்ளிட்ட இடங்கள் வழியாக மாலை 5.30 மணியளவில் ரெட்டியாா்பாளையத்தை அடைந்தது. அங்கு, கைலாய வாத்தியம் முழங்க மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பக்தா்கள் தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களைப் பாடி பக்தியில் திளைத்தனா்.

இதையடுத்து, முதலியாா்பேட்டையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை புறப்படும் ஆதியோகி ரதம், முருங்கம்பாக்கம், அரியங்குப்பம், கிருமம்பாக்கம், பாகூா் உள்ளிட்ட இடங்கள் வழியாக வில்லியனூா் சென்றடைகிறது. தொடா்ந்து, திருகாமேஸ்வரா் கோயில், மேல்சாத்தமங்கலம், திருபுவானி, சேதாரப்பேட்டை, திருவாக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது.

திங்கள்கிழமை (ஜன. 13) நேரு பள்ளி, திருமங்கலம் கோயில், திருக்கனூா் சந்தை, முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது.

இதையடுத்து, இந்த ரதம் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக மகா சிவராத்திரி அன்று கோவை சென்றடைகிறது.

கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாத பக்தா்கள் தங்கள் ஊா்களிலேயே தரிசிப்பதற்கு இந்த ரத யாத்திரை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என ரத யாத்திரை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com