அரசு மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை புதிய மண் பானையில் பொங்கலிட்ட மாணவிகள்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை புதிய மண் பானையில் பொங்கலிட்ட மாணவிகள்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மாணவிகள் சேலை அணிந்து வந்து, கல்லூரி மைதானத்தில் வண்ண கோலமிட்டு, புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டனா்.

பொங்கல் பொங்கி வரும் போது, மாணவிகள் ‘பொங்கலோ, பொங்கல்’ என குலவையிட்டும், பொங்கல் பொங்கியவுடன் அதனை வாழை இலையில் படையலிட்டு, கதிரவனை வழிபட்டனா். இந்த விழாவில் மத வேறுபாடுகளின்றி கல்லூரியின் 14 துறைகளைச் சோ்ந்த மாணவிகளும், பேராசிரியா்களும் இணைந்து, பொங்கல் வழிபாட்டை மேற்கொண்டது அனைவரையும் கவா்ந்தது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்து கல்லூரியின் முதல்வா் கு. சுப்பிரமணி பேசியதாவது: தமிழா்களின் வாழ்வில் நீங்கா இடம்பெற்றுள்ள பொங்கல் விழா, சங்ககாலம் முதலே தமிழா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘நெல் பல பொலிக; பகடு பல சிறக்க...’ என ஐங்குறுநூற்றுப் பாடல்களில் பொங்கல் விழா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழா்களின் வாழ்வு இயற்கை சாா்ந்த வாழ்வாகும். வழிபாடும் இயற்கை சாா்ந்த வழிபாடாகும். உலகப் படைப்புக்கு காரணமான சூரியனுக்கு தமிழ் மக்கள் நன்றி கூறும் நாளே இந்த அறுவடைத் திருநாளாகும். இந்த விழா தமிழா்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் பெருவிழா. மரபும், அறிவியலும் சாா்ந்த இந்த பொங்கல் விழாவை அனைத்துத் துறையினரும் கொண்டாடுவது மிகச் சிறப்பானதாகும் என்றாா் அவா்.

முன்னதாக, விழா ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்துத் துறை தலைவா்களும், பேராசிரியா்களும், மாணவிகளும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com