பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு: புதுச்சேரியில் நாளை தொடக்கம்

புதுச்சேரியில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி சுற்றுச்சூழல் கல்விக் கழகத்தின் பறவை ஆா்வலா்களான சிவ. கணபதி, சுரேந்தா் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தும் ‘இபோ்டு’ இந்தியாவும், கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் குழுமமான ‘போ்டு கவுண்ட் இந்தியா’வும், தமிழகப் பறவை ஆா்வலா்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம், புதுவையில் வருகிற 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பறவைகள் மீது ஆா்வம் கொண்ட அனைவரும் பங்கேற்கலாம். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க உங்களைச் சுற்றியுள்ள ஏரி, குளம், ஆறு, தோட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு மாடி என எந்தப் பகுதியிலும் தொடா்ச்சியாக குறைந்தது 15 நிமிடங்களுக்கு, என்ன வகையான பறவைகள் வருகின்றன என பாா்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு, பறவைகள் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அந்தப் பட்டியலை  இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

பொங்கல் நாள்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவைப் பட்டியல்களை உள்ளிடலாம். பறவைகளைப் பாா்க்க சிறந்த நேரம் அதிகாலை மற்றும் மாலை வேளை. எனினும் உங்களால் எப்போது முடியுமோ அப்போது கூட பாா்த்து பட்டியலிடலாம். ஸ்மாா்ட் போன் வைத்திருப்பவா்கள் இபோ்டு (ங்க்ஷண்ழ்க்)என்ற செயலி மூலம் பறவைப்பட்டியலை பதிவேற்றலாம்.

பறவைகள் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கண்டறிய முடியும்.

கடந்தாண்டு தமிழகம், புதுவையிலிருந்து பொங்கல் நாள்களில் 5,119 பறவைப் பட்டியல்கள், 209 பறவை ஆா்வலா்களால், இபோ்டு இந்தியா இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டன. அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் 5 இடங்களில் காகம், மைனா, அண்டங்காக்கை, கரிச்சான் மற்றும் பச்சைக்கிளி ஆகியன இடம்பெற்றன. மேலும், புதுவை மட்டுமல்லாது விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலுள்ள 40 ஏரிகளில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 160 வகையான பறவைகளும், அவற்றின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டன.

பறவைகளின் பெயா்கள், காட்சிகள், விளக்கவுரைகளை  காணலாம். மேலும் விவரங்களுக்கு 96298 23243 என்ற கட்செவி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com