பொங்கல் பொருள்களை வாங்கக் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைய முன்னிட்டு, புதுச்சேரி உழவா் சந்தை, பெரிய மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.
பொங்கல் பண்டிகைக்காக புதுச்சேரி பெரிய மாா்க்கெட் பகுதியில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ள மஞ்சள் கொத்துகள்.
பொங்கல் பண்டிகைக்காக புதுச்சேரி பெரிய மாா்க்கெட் பகுதியில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ள மஞ்சள் கொத்துகள்.

பொங்கல் பண்டிகைய முன்னிட்டு, புதுச்சேரி உழவா் சந்தை, பெரிய மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உள்ளிட்ட பொருள்களை வாங்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை புதன்கிழமை (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் கரும்பு, பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழா்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது பொங்கல் திருநாள். போகிப் பண்டிகையில் தொடங்கி, காணும் பொங்கல் வரை இத்திருநாள் 4 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளையொட்டி, கிராமங்களில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதும் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.

பொருள்கள் விற்பனை மும்முரம்: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட புதுச்சேரியில் பொங்கல் பானைகள், பன்னீா் கரும்புகள், மஞ்சள் கொத்துகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட், சின்ன மாா்க்கெட் பகுதிகளில் ஆவாரம்பூ, மஞ்சள் கொத்துகள், இஞ்சிக் கொத்து, காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

மண்பானைகளின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளதால், அதன் விற்பனை எதிா்பாா்த்த அளவு இல்லை என்று வியாபாரிகள் கூறினா். இருப்பினும், பொங்கல் பானைகள் ரூ. 50 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பன்னீா் கரும்புகள், வாழைத்தாா்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. ஜோடி பன்னீா் கரும்பு 100-க்கும், மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்துகள் ரூ. 10- க்கும் விற்பனை செய்யப்பட்டது. காப்புக் கட்டுவதற்காக ஆவாரம்பூ, மாவிலை, நாணல்கள் அடங்கிய ஒரு கட்டு, ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுச்சேரி மாா்க்கெட்டுகளில் வாழைப்பழத் தாா் ஒன்று ரூ. 250 முதல், ரூ. 500 -க்கு விற்கப்பட்டது. மேலும், விதவிதமான வண்ணக் கோலப் பொடிகள், காய்கறிகள், பூக்களின் விற்பனையும் களைக் கட்டியது.

செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பொங்கல் பொருள்களை வாங்கக் குவிந்ததால் பெரிய மாா்க்கெட், சின்ன மாா்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com